முக்கிய செய்திகள்

ஐ.எம்.எப்பின் பணயக் கைதிகளாகியுள்ளனர் ஜனாதிபதியும் அரசாங்கமும்- சஜித் பிரேமதாச

சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் இருந்து தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தையே ஜனாதிபதி முன்வைத்துள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நேற்று (17-02-2025) ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நாடு அநுரவுக்கு என்ற கொள்கைப் பிரகடனத்துக்கமைய பெரிய கேக் ஒன்றை தயாரிப்பதாகவே உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், வரவு – செலவுத் திட்ட உரையை பார்க்கும்போது நாடு அநுரவுக்கு அல்ல ‘ஐ.எம்.எப்’க்கு என்பது போன்றே இருக்கிறது.

அதாவது சர்வதேச நாணய நிதியம் விதித்த கட்டுப்பாட்டுக்குள் தயாரிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டமாகவே இருக்கிறது.
சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரல்கள் இதில் உள்ளன. அதன்படி மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களே முதலீட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதித்தின் நிபந்தனைக்குள் இருக்கிறார். அவர்கள் கூறிய நிலைபேறான பொருளாதாரம் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் இல்லை.

இதனால் திருத்தங்களை முன்வைக்கும்போது திருத்தங்களை மேற்கொண்டு, மக்களுக்கு வாக்குறுதி அளித்த பிரகாரம் சௌபாக்கியமான நாடு என்ற கொள்கைப் பிரகடனத்தை செயற்படுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் நாடு அநுரவுக்கு என்று கூறிக்கொண்டு சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்துக்கு ஏற்றவாறு ஆடும் பயணமாகவே தெரிகிறது.

இவர்கள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் பணயக் கைதிகள் போன்று ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் மாறியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும். பெற்ற மக்கள் ஆணையை முழுமையாக மீறுவதாகவே நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp