முக்கிய செய்திகள்

மருதானை பொலிஸ் நிலையத்தில்; பெண் தற்கொலை செய்தாரா? பொலிஸார் கொன்றார்களா? -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாட்டிலே தான் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதே தவிர பொலிஸாரின் மனநிலையில் தமிழர்களிற்கு எதிரான மனோநிலையில் மாற்றம் ஏற்படவில்லையென கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மருதானை பொலிஸ் நிலையத்தில் தமிழ்பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஆட்சிமாற்றம் ஏற்பட்டாலும் 70ஆண்டுகளாக தமிழர்களிற்கு எதிரான ஒடுக்குமுறையில் ஈடுபட்ட பொலிஸாரது மனநிலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

இந்த மரணம் போலீசாரின் தடுப்பு காவலில் இருந்தபொழுது நடைபெற்றதால் போலீசாரே இவரது மரணத்திற்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டின் தலைநகரிலுள்ள 24 மணி நேரமும் தீவிரமான செயற்பாட்டில் இருக்கக்கூடியதெனக் கருதப்படுகின்ற சர்வதேச சமூகத்தினரும் வெளிநாட்டுச் சுற்றுலாபயணிகளும் அதிகம் நடமாடுகின்ற பகுதியிலுள்ள காவல் நிலையம் ஒன்றில் இப் பெண் தற்கொலை செய்து கொண்டார் என்பது சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவித்துள்ளார்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp