செய்திகள்

நீதிபதி இளஞ்செழியனை அநுர அரசு திட்டமிட்டு புறக்கணித்துள்ளது- தீவக சிவில் சமூகம்

e0aea8e0af80e0aea4e0aebfe0aeaae0aea4e0aebf e0ae87e0aeb3e0ae9ee0af8de0ae9ae0af86e0aeb4e0aebfe0aeafe0aea9e0af88 e0ae85e0aea8e0af81e0aeb0 | Pathivu News

மேன்முறையீட்டு நீதிபதிக்கான பதவி உயர்விற்கு அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அதில் கவனம் செலுத்தாது நீதிபதி இளஞ்செழியனுக்கு அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைத்துள்தாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன், முன்னாள் வடக்கு மாகண சபை உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாடியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது’ இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்செழியனுக்கு பாரபட்சமான வகையில் இந்த அரசு பதவி உயர்வு வழங்காது பழிவாங்கியுள்ளது..

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருந்தார்.

ஆனால் அவருக்கான பதவிகள் அந்தந்தக் காலகட்டத்தில் வழங்கப்படாது அரசுகளால் திட்டமிட்ட வகையில் தட்டிக்களிக்கப்பட்டு வந்தது.

இதன் உச்சமாக தற்போது அனுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ளியுள்ளது என தீவக சிவில் சமூகம் மேலும் தெரிவித்துள்ளது

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp