செய்திகள்

யாழ்ப்பாண சாரதிக்கு பரந்தனில் மயக்கமருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

e0aeafe0aebee0aeb4e0af8de0aeaae0af8de0aeaae0aebee0aea3 e0aeaae0aeb0e0aea8e0af8de0aea4e0aea9e0aeb2e0aebfe0aeb2e0af8d e0ae9ae0aebee0aeb0 | Pathivu News

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்று (19) கொள்ளையடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:

வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர்.

பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக வாகனத்தை நிறுத்துமாறு இருவரும் சாரதியிடம் கூறியுள்ளனர்.

வாகனம் நிறுத்தப்பட்ட பின்னர் அப்பகுதியில் உள்ள கடையொன்றில் இருவரும் குளிர்பானம் வாங்கி, சாரதிக்கு குடிப்பதற்கு வழங்கியுள்ளனர்.

குளிர்பானத்தை குடித்த சாரதி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

வீதியோரத்தில் நீண்ட நேரமாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் சாரதி அசைவின்றி மயக்க நிலையில் இருந்ததை அவதானித்த சிலர், சாரதியை உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட சாரதி சுயநினைவுக்கு வந்த பின்னரே, தனது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

 

 

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp