முக்கிய செய்திகள்

யாழ். குருநகர் சிறிய சூறாவளி : 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) வீசிய மினி சூறாவளி காரணமாக மூவர் காயமடைந்துள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என். சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

குருநகர் ஜே 68 மற்றும் ஜே 69 கிராம சேவையாளர் பிரிவுகளில் 49 குடும்பங்களை சேர்ந்த 222 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மூவர் காயமடைந்துள்ளனர்.

அதேவேளை 49 வீடுகள் பகுதிகளவில் சேதமடைந்துள்ளன.
சேத விபரங்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மேலும் தெரிவித்தார்.

 

 

 

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp