முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் தொடர் மழையின் எதிரொலி குளங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக குளங்கள் நிரம்பி நீர்மட்டம் அதிகரித்து வான்பாய்வதால் ஆற்றை அண்டிய தாழ்நில பகுதி மக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் இன்று (19) மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரிய குளங்களான உன்னிச்சை மற்றும் நவகிரி உட்பட பல குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக ஆற்றினை அண்டிய பிரதேசங்கள் மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

நீர்மட்டம் அதிகரிக்குமாயின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும்.

கடல், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மீன்பிடி நடவடிக்கைகளில் மிக அவதானத்துடன் இருக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp