உலகம் செய்திகள்

காசா போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமை பெறவில்லையென்கிறார் – இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஹமாஸ் உடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் முழுமை பெறவில்லை என்றும், இதுகுறித்த இறுதிக்கட்ட விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

முன்னதாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்கா மற்றும் கத்தார் அறிவித்த நிலையில், நேதன்யாகு இந்த தகவலை தெரிவித்துள்ளது. போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் நேதன்யாகு இவ்வாறு தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா மற்றும் கத்தார் கூட்டாக வெளியிட்ட ஒப்பந்த விவரங்களின் படி காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த பேரழிவு தரும் போரை இடைநிறுத்தம் செய்து, டஜன் கணக்கான பணயக்கைதிகள் அவரவர் வீடுகளுக்கு செல்வதற்கான வழியைத் தெளிவுபடுத்தி உள்ளது.

இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலையற்ற சூழலை ஏற்படுத்தியதோடு, உலகளாவிய எதிர்ப்புகளை தூண்டியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் காசா வீதிகளில் இறங்கி, ஆரவாரம் செய்து, கார் ஹாரன்களை ஒலிக்கச் செய்தனர்.

‘நாம் இப்போது அனுபவிக்கும் உணர்வை, விவரிக்க முடியாத, விவரிக்க முடியாத உணர்வை யாராலும் உணர முடியாது,’ என்று மத்திய காசாவின் டெய்ர் அல்-பலாவில் மஹ்மூத் வாடி கூறினார்.

இதையும் படியுங்கள்>தென்ஆப்பிரிக்க தங்க சுரங்கத்தில் 87 தொழிலாளர்கள் உயிரிழப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp