உள்ளூர் முக்கிய செய்திகள்

மகிந்தவின் புத்தா மது அருந்துவதில்லையாம்!

பல்வேறு காரணிகளால் எம்மை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம்.  உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரிகள் திருத்தம் செய்யப்படுகிறது.

காலையில் தான் வரிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
பொருளாதார விவகாரத்தில் அரசாங்கம் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பதை அறிய முடியவில்லை.

மதுபான பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் எனக்கொன்றும் பிரச்சினையில்லை, ஏனெனில் நான் மது அருந்துவதில்லை.

மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டால் சட்டவிரோத மதுபான உற்பத்திகள் அதிகரிக்கப்படும். அது பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

பல்வேறு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை விட்டு விலகிச் சென்றவர்கள் இன்று அரசியலில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.

விலகிச் சென்றவர்களை மீண்டும் இணைத்துக் கொள்வதற்கு அவதானம் செலுத்தியுள்ளோம். உள்ளக மட்டத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். கட்சி என்ற ரீதியில் பலமடைவதற்கான அனைத்து திட்டங்களையும் செயற்படுத்தியுள்ளோம்.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. ஆகவே எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்கள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

தற்போது அவர் தான் ஜனாதிபதி ஆகவே எம்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.

நான் சட்டக்கல்லூரி பரீட்சைக்கு தோற்றிய விதம் தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக குறிப்பிட்டேன்.

இதுவரை அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>  தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp