உள்ளூர்

இந்திய மீனவர்கள் 12 பேரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் குறித்த 12 இந்திய மீனவர்களும் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு இடையூறு விளைவித்தமை, கடற்படை படகை சேதப்படுத்தியமை,
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பன்னிரு இந்திய மீனவர்களும்; நேற்று முன்தினம் (08) பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை கடந்த வருடம் நவம்பர் 27ம் திகதி எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு; வழக்கில் இருந்து நிபந்தனையுடன் விடுவித்து உத்தரவிட்டிருந்தார்.

ஆனாலும் கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கியமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாரினால் மேற்கொண்ட வழக்கில் விளக்கமறியலில் மீனவர்கள் பன்னிருவரும் 08ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு மீண்டும் பருத்தித்துறை நீதிமன்றில் நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது வழக்கை விசாரித்த நீதவான் இந்திய மீனவர்களுக்கு கடூழிய சிறை என்ற நிபந்தனையுடன் பத்து வருடங்களுக்கு ஒத்தி வைத்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்திய மீனவர்களது படகு அரசுடமையாக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>யாழில் நிதிசேகரிப்பில் ஈடுபட்ட மதபோதகர் உட்பட இருவர் கைது!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp