செய்திகள்

2024 ஆம் ஆண்டு மட்டும் வவுனியாவில் 113 பேருக்கு டெங்கு நோய் 

வவுனியா மாவட்டத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு 113 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டதாக பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மழை காலங்களில் மழை நீரானது டெங்கு நுளம்பு பெருக்கும் வகையில் தேங்கி நிற்காமல் இருப்பதற்காக சுகாதார பரிசோதகர்க், பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 113 பேர் வவுனியாவில் டெங்கு நோயினால் பாதிப்படைந்தனர்.

அதில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மட்டும் 82 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்