மாவீரர் வாரத்தின் 4 ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வும், மாவீரர்களின் பெற்றோர், உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வும் யாழ்ப்பாணம்
சாவகச்சேரி நகராட்சி மன்ற பொன்விழா மண்டபத்தில் நேற்று (24.11.2026) பிற்பகலில் இடம்பெற்றது.
போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பொதுச் சுடரை மூன்று மாவீரர்களின் தந்தையான பொன்னையா பூபாலசிங்கம் ஏற்றிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து உயிர் நீத்தவர்களுக்கு மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு,
மாவீர்களின் பெற்றோர், உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.
இந்த நினைவஞ்சலி நிகழ்வில், சாவகச்சேரி நகராட்சி மன்றத்தின் தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ், உப தவிசாளர் கோகுலன், அரசியல் செயற்பாட்டாளர் கந்தையா அருந்தவபாலன், நகரசபையின் முன்னாள் உப தவிசாளர் ஞானப்பிரகாசம் கிசோர், சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

What’s your Reaction?

