கிளிநொச்சி டிப்போ சந்தியில் பொலிஸாரால் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடாவடித்தனமாகக் கழற்றி எடுத்துச் செல்லப்பட்ட மாவீரர் நினைவு வளைவு, எமது இளைஞர்களின் முழுமையான முயற்சியினால் மீண்டும் புதிதாக உருவாக்கப்பட்டு நேற்று அதே இடத்தில் நிறுவப்பட்டுள்ளது.
எத்தனை தடைகள் வந்தாலும், எத்தனை நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மாவீரர்களின் நினைவுகளை எவராலும் அழித்துவிட முடியாது என்பதை எம்மவர்கள் தமது செயற்பாட்டின் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இது வெறும் நினைவு வளைவு அல்ல எம் மண்ணுக்காக உயிர் துறந்த எம் குலசாமிகளின் நினைவுகளையும், அவர்களின் தியாகத்தையும் சுமந்து நிற்கும் வரலாற்றுப் பதிவு.


What’s your Reaction?

