மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு , திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பாலக்குடா பகுதியில் நடைபெற்றது.
மாவீரர் பணிக்குழுவின் ஏற்பாட்டில், அதன் தலைவர் நா. கிஸ்ணபிள்ளை தலைமையில் இந்நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இதன்போது, மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் மலர் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர்.
தொடர்ந்து தீபச்சுடர் ஏற்றுதல், விளக்கேற்றல் மற்றும் இறைவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.
அத்துடன், உயிர்நீத்தவர்களின் உருவப்படங்களுக்கு தீபமேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
( வி.ரி. சகாதேவராஜா)



What’s your Reaction?

