அம்பாறை தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மூன்றாவது பாலம் மொரகஹப்பள்ளம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் 44 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தமன மொரகஹப்பள்ளம் (இல. 53/2) பகுதியைச் சேர்ந்த கே. இந்திராணி மல்லிகா என்ற பெண்ணே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இன்று (24) அதிகாலை 2.00 மணியளவில் குறித்த பெண் கழிவறைக்குச் செல்வதற்காக வீட்டை விட்டு வெளியே வந்தபோது வீட்டின் பின்புறம் நின்றிருந்த காட்டு யானை அவரைத் தாக்கியுள்ளது. யானையின் தாக்குதலுக்கு இலக்கான அப்பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
கிராமத்தைச் சூழவுள்ள ‘நெல்லி கேளே’ வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியை உடைத்துக்கொண்டு இரவு வேளைகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதாகவும், அவ்வாறு வந்த யானையே இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நிருபர்
பாறுக் ஷிஹான்
What’s your Reaction?

