யாழ்ப்பாணம் , மானிப்பாய் கோட்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை திருவள்ளுவர் சனசமூகநிலையத்தில் இடம்பெற்றது.
மங்கள வாத்திய இசையுடன் பெற்றோர் உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பித்தன.
இரண்டு மாவீரர்களின் தாயான கிருஷ்ணராணி மற்றும் மாவீரரின் தயாரான பாக்கியம் ஆகியோர் சுடர் ஏற்றியதுடன், மாவீரரின் பெற்றோர்களான பூரணம் மற்றும் ரத்தினம் ஆகியோர் மலர் மாலைகளை அணிவித்தனர்.
தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர் வணக்கமும் இடம்பெற்றது.


What’s your Reaction?

