தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர்.
அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பட்டாசுக்கான இரசாயன பொருட்களைக் கலக்கும் போது விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்> வடமாகாணத்தின் முதன்மையான சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத்திட்டம்..!