புதியவை உள்ளூர் முக்கிய செய்திகள்

செம்மணி புதைகுழி வழக்கு – சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலம், கார்பன் பரிசோதனை அனுமதி குறித்து இன்று முக்கிய தீர்மானம்..!

semmani mass grave case key decision today on somaratne rajapaksas testimony and approval for carbon dating | Pathivu News

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

அதன் போது, கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற செம்மணி மனித புதைகுழி வழக்கில், செம்மணி புதைகுழி தொடர்பான முக்கிய சாட்சியமாக கருதப்படும் கிரிசாந்தி கொலை வழக்கின் மரண தண்டனை கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்சேவிடம் விசாரணைகளை மேற்கொண்டு , வாக்கு மூலங்களை பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கி இருந்தது.

அதன் அடிப்படையில் சோமரத்ன ராஜபக்சேவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலங்களை பெற்றமை தொடர்பிலான தகவல்களை தெரிவிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

அதேவேளை, புதைகுழியின் கால எல்லையை அறிவதற்காக கார்பன் (C – 14) பரிசோதனைகளை செய்வதற்கான அனுமதியை கடந்த 19ஆம் திகதி நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, குற்றப்புலனாய்வு பிரிவினர் கோரிய போது, நவம்பர் நடைபெறவுள்ள வழக்கு விசாரணையின் போது ஆராய்வதாக மன்று கூறியிருந்த நிலையில் , அது தொடர்பிலும் முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.

அத்துடன் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இறுதி கட்டங்களில், புதைகுழி தவிர்ந்த ஏனைய 14 இடங்களில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனைக்குழிகளில் , 05 சோதனைக்குழிகளுக்குள் , 08 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு , அவை அகழ்ந்து எடுக்கப்பட்டன.

அதனால் மேலும் குறித்த பகுதிகளில் என்புக்கூடுகள் காணப்படலாம் எனும் சந்தேகம் நிலவுவதனால் , நான்காம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் , நாளைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் , புதைகுழி தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் காரசாரமான கருத்துக்களை பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து முன்னிலையாகவுள்ள சட்டத்தரணிகள் முன் வைக்கும் சாத்தியம் உண்டு.

இந்நிலையிலையே,நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை , செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை தேவை எனவும் , தொல்லியல் பேராசிரியரின் அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தமை

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊