யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இல்லம் அமைந்திருந்த பகுதியை பார்வையிட்டதுடன் அந்நிலத்தின் மண்ணையும் அள்ளிச்சென்றார்.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் , அப்பகுதி வெறும் காணியாகவே காணப்படுகிறது.
குறித்த பகுதியில் தான் புலிகளின் தலைவரின் பிறந்த தினமான நவம்பர் 26ஆம் திகதி மறைந்த எம்.கே சிவாஜிலிங்கம் கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடுவது பழக்கமாகும்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1157931100128409
What’s your Reaction?

