உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

சாவகச்சேரியில் ஆரம்பமான பாரம்பரியம் மற்றும் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி..!

exhibition of traditional and artistic creations opens in chavakachcheri | Pathivu News
வடக்கின் பாரம்பரியம் மற்றும் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தும் இருநாள் கண்காட்சி நேற்று ஆரம்பமானது.
வடக்கு மாகாணத்தின் தனித்துவமான பண்பாட்டு அடையாளங்கள், மரபுகள் மற்றும் பாரம்பரியச் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வடக்கு மாகாணப் பண்பாட்டியல் காண்பியக்கூடக் கண்காட்சியை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை(17.11.2026) ஆரம்பித்து வைத்தார்.
வடக்கு மாகாணக் கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் அலகால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சி, தென்மராட்சிக் கலாசார மண்டபத்தில் ஆரம்பமானது.
வடக்கு மாகாணத்தின் பண்பாட்டுச் செழுமையையும் தனித்துவமான அடையாளங்களையும் வெளிப்படுத்துவதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லும் நோக்கில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கண்காட்சியில் ஓவியங்கள், சிற்பங்கள், கடந்த காலங்களில் மக்கள் தமது அன்றாட வாழ்வியலில் பயன்படுத்திய பாரம்பரியப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் முன்னோர்களின் வாழ்வியல் முறைகளையும் பிரதிபலிக்கும் இக்காட்சிப்பொருட்களைப் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இக்கண்காட்சி நாளை புதன்கிழமை வரையில் இரு நாட்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்திருக்கும். வடக்கு மாகாணத்தின் பண்பாட்டு மரபுகளையும் அடையாளங்களையும் அறிந்துகொள்ள விரும்பும் பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியைப் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/29124175223857539

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊