ஜெசாக் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உட்படுத்தற் கல்வி மாணவர்களுக்கான சிறுவர் தின நிகழ்வு அண்மையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மாற்றுத்திறனுடைய சிறுவர்களின் உரிமைகள், திறமைகள் மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளடக்கக் கல்வி சிறுவர் தின நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் R. கஜேந்திரவா அவர்களும், சிறப்பு விருந்தினராக வலயக் கல்விப் பணிப்பாளர் (விசேட கல்விப் பிரிவு) திரு. P. சுரேந்திரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், அரச திணைக்கள அதிகாரிகள், சிறுவர் உரிமைகள் மற்றும் சமூக சேவைப் பிரிவு பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்ளடக்க விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் செயற்பாடுகள் மூலம் அனைத்து சிறுவர்களும் சமமாகப் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது.
மாற்றுத்திறனுடைய சிறுவர்களை ஏற்றுக்கொள்ளுதல், சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் உள்ளடக்கக் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


