சமூக பலத்திற்கு புதியதோர் பலம்” எனும் தொணிப்பொருளில் வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான வலுவூட்டல் வேலைத்திட்டம் 27.10.2026 செவ்வாய்க்கிழமை தென்மராட்சி கொடிகாமம் நட்சத்திர மஹால் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது கிராமிய மக்களை வலுவூட்டுகின்ற தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
மேலும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் தம்மிக முத்துக்கல, யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் நுண்ணிதி பணிப்பாளர் லால் கர்ணாதிலக, மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் பொன்னம்பலம் சிறீவர்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மேலும் வடமாகாணத்தைச் சேர்ந்த அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

