மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் நேற்றைய தினம் (26.10.2026) பூநகரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமாகி, பூநகரி பிரதேச செயலகத்தில் நிறைவடைந்தது.
இதனைத் தொடர்ந்து, பூநகரி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தமர்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய சமுதாய வைத்திய நிபுணர், தொற்றாநோய் வைத்திய அதிகாரி, பொதுச் சுகாதார மருத்துவ தாதிய சகோதரி, சுகாதார வைத்திய அதிகாரி, மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி, பூநகரி பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மார்பகப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை அறிந்துகொள்ளுதல், ஆரம்பத்திலேயே நோயைக் கண்டறிவதன் முக்கியத்துவம் மற்றும் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

