செய்திகள்

தமிழரசுக் கட்சிக்குள் பிரச்சினைகள் இல்லை- இரா.சாணக்கியன்

e0aea4e0aeaee0aebfe0aeb4e0aeb0e0ae9ae0af81e0ae95e0af8d e0ae95e0ae9fe0af8de0ae9ae0aebfe0ae95e0af8de0ae95e0af81e0aeb3e0af8d e0aeaae0aebf | Pathivu News

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய விளையாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும்; இரத்ததானமுகாம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் பாரியளவிலான இரத்தப்பற்றாக்குறையினை குறைக்கும் வகையில் இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினருடன் இணைந்து இந்த இரத்ததான முகாம் பெரியகல்லாறு இந்துக்கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கல்லாறு மத்திய விளையாட்டுக்கழகத்தின் தலைவர் அ.அகிலன் தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,

இலங்கை தமிழரசுக்கட்சியானது பழமை வாய்ந்த கட்சியாகும். 75 ஆவது ஆண்டு நிறைவு பவளவிழாவினை நடாத்தும் பொறுப்பும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தரப்பட்டிருக்கின்றது.

தமிழரசுக் கட்சிக்குள் தொடர்ந்து குழப்பம் இல்லை.

ஆனால் ஒருசில கோமாளி ஊடகங்கள் ஒரு சில கோமாளிகளை வைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சிக்குள் குழப்பங்கள் இருப்பதாக சமூகவலைத்தளங்கள், யூடியூப் சனல்களில் போலியான செய்திகளை வெளியிடுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp