செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வடகில் போராட்டம்

e0aeb5e0aeb2e0aebfe0aea8e0af8de0aea4e0af81 e0ae95e0aebee0aea3e0aebee0aeaee0aeb2e0af8d e0ae86e0ae95e0af8de0ae95e0aeaae0af8de0aeaae0ae9f | Pathivu News

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும் ஏந்தியவாறு

‘காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகள் எங்கே

இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன?’, ‘ஐ.நாவே நீதியைப் பெற்றுத் தா

’15 வருடமாக போராடும் எமக்கு விடிவு இல்லையா’

என பல்வேறு கோஷங்களைஎழுப்பியவாறு வவுனியாவில் போராட்டம் முன்னெடுக்கப்ட்டது

இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஐ.நா அமர்வில் எமக்கான நீதியை பெற்றுத் தர ஐ.நா வலியுறுத்த வேண்டும்.

2025ஆம் ஆண்டிலாவது எமது 15 வருட போராட்டத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

0000000000000000
இலங்கையில் உள் நாட்டு யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் வாழும் உறவுகள் இன்றையதினம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி யாழ்ப்பாணத்pல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நீதி வேண்டி வடக்கு மாகாணத்தின் மாவட்டங்கள் தோறும் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் ஒரு அங்கமாகவே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் முனியப்பர் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராடமானது ஊர்வலமாக யாழ். பிரதான வீதி மற்றும் காங்கேசன்துறை வீதியூடாக சென்று யாழ் மத்திய பேருந்து நிலையத்தை அடைந்தது.

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஒன்று கூடிய வாழும் உறவுகள் தமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைகுறித்து சர்வதேசமே தீர்வை வழங்க வேண்டும் போன்ற சுலோகங்களை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
00000000000000000

தாய்மாரின் கண்ணீருக்கு பதில் தருவதாகக் கூறிய புதிய ஜனாதிபதியும் ஏமாற்றியுள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அலுவலகம் முன்பாக இடம் பெற்றதுடன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது படங்களை ஏந்தியவாறு குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எமது பிள்ளைகள் கையளித்தும், சரணடைந்தும் காணாமல் ஆக்கப்பட்டள்ளனர். கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டும் உள்ளனர். குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட எமது பிள்ளைகளைத் தேடி நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம்.

அவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க சர்வதேசம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர்ந்தும் போராடுகின்றோம்.
இதற்கு முன் இருந்த அரசுகள் எம்மை ஏமாற்றின. தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்ட நிலையில் சர்வதேசத்திடம் நீதி கேட்டு போராடுகிறோம்.

ஆண்டுகள் பல கடந்தாலும், எமது போராட்டத்துக்கான தீர்வும், நீதியும் இன்றுவரை கிடைக்கவில்லை.
எமக்கு நீதி கிடைக்கும் வரை நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.

இலங்கையில் இடம்பெற்ற தேர்தல்களில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி பெற்றுக் கொடுப்பேன் என புதிய ஜனாதிபதி கூறினார்.

ஆனால் 6 மாதங்களாகியும் இன்றுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஏனைய ஜனாதிபதிகள் போன்று இவரும் ஏமாற்றுவதாகவே உணர்கின்றோம்.
இன்றுவரை பாதிக்கப்பட்ட எம்முடன் பேசக்கூவில்லை.

அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வலியும், கண்ணீரும் எனக்கும் தெரியும் என்றார்.

அதன் வலி எனக்கு புரியும் என்றார்.

ஆனால் இன்றுவரை எந்த முயற்சியும் அவர் எடுத்திருக்கவில்லை.

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றபட்டே வருகின்றோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ; மேலும் தெரிவித்திருந்தனர்

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp