யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள, இலங்கைக்கான கியூபா தூதுவர் பெகோ குவேரா, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார்.
நூலகத்தை பார்வையிட்ட தூதுவர், தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவு எவ்வாறு செயல்படுகின்றது, அதன் கல்விசார் செயற்பாடுகள் மற்றும் மக்களுக்கான பணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பன தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டார்.
அதன் போது, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் , தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பானவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பான ஆவணம் கியூபா தூதுவரிடம் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?

