ஜனாதிபதி செயலகம் மற்றும் முதியோர் செயலகம் ஆகியன இணைந்து தேசிய முதியோர் மாதத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்த முதியோர் பசுமை நல்லிணக்க சைக்கிள் சவாரி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை வேலணை பிரதேச செயலகத்திற்கு சென்று இருந்தனர்.
பிரதேச செயலகத்திற்கு சென்ற 12 பேர் கொண்ட சைக்கிள் சவாரிக் குழுவினரை பிரதேச செயலாளர் தனபாலசிங்கம் அகிலன் தலைமையிலான பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் இவ் பயணத்தின் முக்கிய நோக்கங்களாக, முதியோருக்கான அவசர உதவிச் சேவையின் 1890 என்ற தொலைபேசி இலக்கம் தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் முதியோர் உரிமைகள், நலன்கள் தொடர்பில் சமூகத்தின் கவனத்தை ஈர்த்தல் ஆகியன தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றது
அத்துடன் சைக்கிள் சவாரி பயணக்குழுவினருக்கான நினைவுப்பரிசிலினை பிரதேச செயலர் வழங்கி கௌரவித்தார்.

What’s your Reaction?

