உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு – கெஹெலிய உள்ளிட்டோருக்கு எதிராக மனு..!

e0aea8e0af80e0aea4e0aebfe0aeaee0aea9e0af8de0aeb1 e0ae85e0aeb5e0aeaee0aea4e0aebfe0aeaae0af8de0aeaae0af81 e0ae95e0af86e0aeb9e0af86 | Pathivu News
உயர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா’ (Transparency International Sri Lanka) அமைப்பு உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
மருந்துகளைக் கொள்முதல் செய்ததில் இடம்பெற்ற முறைகேடு காரணமாக அடிப்படை மனித உரிமைகளை மீறியமைக்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாயையும், சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் எஸ்.டீ. ஜெயரத்ன மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர ஆகியோர் தலா 50 மில்லியன் ரூபாயையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாகச் செலுத்த வேண்டும் என கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
பிரதிவாதிகள் இத்தீர்ப்பிற்கு அமைவாகச் செயற்படாமையின் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்தத் தவறிய தொடர்புடைய பிரதிவாதிகளுக்கு எதிராக, 2024ஆம் ஆண்டின் 08ஆம் இலக்க நீதிமன்ற நிறுவனங்களை அவமதித்தல் பற்றிய சட்டம் மற்றும் அரசியலமைப்பின் 105(3) பிரிவின் கீழ் பொருத்தமான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அந்த மனுவின் மூலம் உயர்நீதிமன்றிடம் மேலும் கோரப்பட்டுள்ளது.

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊