சுற்றாடல் சட்ட அமுலாக்கல் குழு கூட்டம் (DELEC) மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் ரீ.சுந்தரேசன் அவர்களின் வழிநடத்தலில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (13.10.2026) இடம் பெற்றுது.
மாவட்ட செயலகம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் இடம் பெற்ற நிகழ்வில் மாவட்டத்தில் சுற்றாடல் சார் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் காணப்படும் பல்வேறு சுற்றாடல் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான சட்ட ரீதியான தீர்வுகள் குறித்து துறைசார் அதிகாரிகள் விரிவாகக் கலந்துரையாடினர்
இதன் போது சுற்றாடல் சட்டங்களை உறுதியாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மாநகர சபை முதல்வர், , பிரதேச செயலாளர்கள், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், ஆணையாளர்கள், திணைக்கள தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.


