இந்து சமய கலாசார அலுவலர்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு சுவாமி விபுலாநந்தர் பயிற்சி நிலையமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா 2026
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு ய. அநிருத்தனன் அவர்களின் வழிகாட்டலுக்கமை முதலாம் நாள் நிகழ்வு காரைதீவு இந்துசமய விருத்திச்சங்கம், இந்துகலாசார ஒன்றிய அறநெறிப்பாடசாலை மணவர்களின் கலை கலாசார நிகழ்வுகள், பூசைவழிபாடுகளுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன இந்நிகழ்வு விபுலாநந்த ஞாபகர்த்த பணிமன்ற உபதலைவர் திரு எஸ். சிவராஜா தலமையில் இடம் பேற்றதுடன் இதில் விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற தலவர் திரு எஸ் ஸூரநுதன் மற்றும் இந்துகலாசார உத்தியோகத்தர் திருமதி ச. சிவலோஜினி ஆகியோர் கலந்து கொண்டதுடன் ஏற்பாடுகளை மாவட்ட இந்துகலாசார உத்தியோகத்தர் திரு கு. ஜெயராஜி மேற்கொண்டார்.


