உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

தம்பிலுவில் முனையூர் பாடசாலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்குப் பாராட்டு..! அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கௌரவம் தம்பிலுவில் முனையூர் பாடசாலையில் புலமைப்பரிசில் மாணவர்களுக்குப் பாராட்டு..! அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் கௌரவம்

thambiluvil munaiyur school grade 5 scholarship students honoured | Pathivu News

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (12.10.2026) சிறப்பாக நடைபெற்றது.

பாடசாலைச் சமூகத்தின் ஏற்பாட்டில், பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் ஆர். உதயகுமார் மற்றும் பொத்துவில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

மலர் மாலைகள் அணிவித்து, வாத்திய முழக்கத்துடன் அதிதிகளுக்கு வரவேற்பு!

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முனையூர் வேப்பையடிப் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு, வாத்திய முழக்கத்துடன் ஊர்வலமாகப் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தொடர்ந்து, பாடசாலை மண்டபத்தில் இறைவணக்கம், வரவேற்பு நடனம் மற்றும் மங்கள விளக்கேற்றல் ஆகியவற்றுடன் நிகழ்வு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், அதிதிகளின் உரைகளும் நடைபெற்றன. இதன்போது, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்குப் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டு, அவர்களின் கல்விச் சாதனைகள் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டன.

மாணவர்களின் வெற்றிக்குப் பின்னால் உழைத்த ஆசிரியர்களுக்கும் கௌரவம்

மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டனர். அத்துடன், நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கும் பாடசாலைச் சமூகத்தினரால் நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் , பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் திருமதி கே. சந்திரகுமார், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச சபை உறுப்பினர் ஜெய ரஞ்சன், காளி கோவில் தலைவர் ஜெயசீலன், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டுவதுடன், அவர்களின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் ஆசிரியர்களின் சேவையை மதித்துக் கௌரவிக்கும் வகையிலும் இந்நிகழ்வு அமைந்தது.

மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடி, ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை மதித்துப் போற்றிய தம்பிலுவில் முனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இந்நிகழ்வு, பாடசாலைச் சமூகத்தின் ஒற்றுமையையும் கல்வி மீதான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

நிருபர்
ஜே.கே.யதுர்ஷன் – தம்பிலுவில்

 

Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News Pathivu News

You may also like

e0aeb0e0aebee0ae9ce0aeaae0ae95e0af8de0aeb7e0ae95e0af8de0ae95e0aeb3e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae8ee0aea4e0aebfe0aeb0e0aebee0aea9 | Pathivu News
உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
e0aeaee0af81e0aeb2e0af8de0aeb2e0af88e0aea4e0af8de0aea4e0af80e0aeb5e0aebfe0aeb2e0af8d e0aeb5e0aeb0e0af8de0aea4e0af8de0aea4e0ae95 e0aea8 | Pathivu News
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊