உள்ளூர்

தேசிய மக்கள் சக்தி, அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி

இலங்கை அரசியலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் ‘ஓய்வு’ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது. கடந்த காலங்களில் தேர்தலில் தோல்வியடைந்த அல்லது உயிரிழந்த அரசியல்வாதிகளைத் தவிர பிறர் எவரும் ஓய்வு பெறவில்லை என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பொதுத்தேர்தலில் போட்டியிடும் NPP வேட்பாளர்கள் மத்தியில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

“முன்னாள் எம்.பி.க்களில் பெரும்பாலானோர் இம்முறை தேர்தல் பிரசாரத்தில் இருந்து ஒதுங்கி உள்ளனர். மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுதான்,” எனத் தெரிவித்த ஜனாதிபதி..

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்கட்சியினரால் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்களை பொய்யானவை என்பதை 21 நாட்கள் முடிவதற்கு முன்னரே எமது அரசாங்கத்தால் நிரூபிக்க முடிந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சி முகாமில் இப்போது பொதுத் தேர்தலுக்கான கோஷங்கள் ஏதும் இல்லாமல் போய்விட்டது என்றார்.

“எதிர்க்கட்சி முகாம் எங்களுக்கு எதிராக தவறான விமர்சனங்களைச் செய்தது. NPP வெற்றிக்குப் பிறகு மோதல்கள் ஏற்படும் என்றும் எரிவாயு மற்றும் எரிபொருள் வரிசைகள் இருக்கும் என்றும் சொன்னார்கள்.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறையும், சர்வதேச ரீதியில் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நாடாகும் எனப் பலவற்றைக் கூறினர்.

ஆனால் இந்த விமர்சனங்கள் அனைத்தும் 21 நாட்களுக்குள் அவர்கள் கண் முன்னே சிதைந்துவிட்டன,” என ஜனாதிபதி தெரிவித்தார்.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp