யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடன ஆசிரியரின் நெறிப்படுத்தலில் ஐக்கிய அமெரிக்காவின் நிவாடா மாநிலத்தில் அண்மையில் இரு வேறு பரதநாட்டிய அரங்கேற்றங்கள் இடம் பெற்றுள்ளன.
யாழ்ப்பாணம் உரும்பிராயை பிறப்பிடமாகவும் உரும்பிராய் இந்துக் கல்லூரியின் முன்னை நாள் நடன ஆசிரியையுமான தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் திருமதி சந்திரவதனி பகீரதன் அவர்களின் நெறியாளர் கையில் குறித்த இரண்டு அரங்கேற்றங்களும் மிகவும் சிறப்பான முறையில் நடந்தேறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 27 ஆம் நாளன்று ஆனோ நிவேடாவில் முதலாவது அரங்கேற்றமும் சென்ற ஓகஸ்ட் 22 ஆம் நாளன்று இரண்டாவது அரங்கேற்றமும் சிறப்புற நடைபெற்றுள்ளது.
பல ஆண்டுகள் தீவிர பயிற்சியின் பின்னர் ஒரு மாணவி முதன் முதலாக தனிநபர் நிகழ்ச்சியாக பொது மேடையில் நிகழ்த்தும் கலை அர்ப்பணிப்பாகவே இவ் அரங்கேற்றங்கள் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
