உலகம் செய்திகள்

உக்ரைனுக்கு அதிகளவில் ஆயுதங்கள் கொடுக்கப்படும்: ஜோபைடன்

e0ae89e0ae95e0af8de0aeb0e0af88e0aea9e0af81e0ae95e0af8de0ae95e0af81 e0ae85e0aea4e0aebfe0ae95e0aeb3e0aeb5e0aebfe0aeb2e0af8d e0ae86e0aeaf | Pathivu News

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகிறது.

இதில் அமெரிக்கா தொடர்ந்து உக்ரைனுக்கு ஆயுதங்களை அளிக்கிறது.
இதற்கிடையே கிறிஸ்துமஸ் நாளான நேற்று உக்ரைன் மீது ரஷியா தீவிர தாக்குதலை நடத்தியது.

Pathivu News

உக்ரைனின் எரிசக்தி கட்ட மைப்புகளை குறிவைத்து 78 ஏவுகணைகள், 106 டிரோன்கள் மூலம் ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 59 ஏவுகணைகளையும் 54 டிரோன்களையும் உக்ரைன் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்தன.

52 டிரோன்கள் மின்னணு ஆயுதங்கள் மூலம் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இத்தாக்கு தலுக்கு ரஷியாவிற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஜோபைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

உக்ரைனில் ரஷியா நடத்திய ஏவுகணை தாக்குதலை கண்டிக்கிறேன்.
குளிர்காலத்தில் உக்ரைன் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் சூழலில், மின்சாரத்தை துண்டிக்க தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நான் தெளிவாக சொல்கிறேன். உக்ரைன் மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ விரும்புகிறார்கள்.

ரஷியாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்காவும், சர்வதேச சமூகமும் உக்ரைனுடன் தொடர்ந்து நிற்க வேண்டும்.
உக்ரைனுக்கு அதிகமான ஆயுதங்கள் வழங்குமாறு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ரஷியாவின் படைகளுக்கு எதிராக, உக்ரைன் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>இந்தியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை நீக்குமாறு ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை!

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp