வேலணை மத்திய கல்லூரி மைதானத்தின் கிழக்குப் பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(04.10.2026) விசமிகளால் திட்டமிட்டு தீ மூட்டப்பட்டதில், அப்பகுதியில் காணப்பட்ட நிழல்தரும் மரங்கள், புற்றரைகள் உள்ளிட்ட தாவரங்கள் தீக்கிரையாகியுள்ளன.
வேலணைப் பிரதேசத்தில் கடந்த சில மாதங்களாக வயல்கள், புற்றரைகள், பனங்கூடல்கள் உள்ளிட்ட பல நூறு ஏக்கர் நிலப்பரப்புகள் விசமிகளால் தொடர்ச்சியாக தீ மூட்டப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வேலணை மத்திய கல்லூரி மைதானத்திற்கு அருகில் மூட்டப்பட்ட தீ, காற்றின் காரணமாக வேகமாகப் பரவி, மைதானத்தின் கிழக்குப் பகுதியை பெருமளவில் பாதித்தது.
தொடர்ச்சியாக இடம்பெறும் இவ்வாறான திட்டமிட்ட தீ மூட்டல்களைத் தடுத்து, சுற்றுச்சூழலையும் அப்பகுதியில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்க உரிய தரப்பினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/2186056979008652
What’s your Reaction?

