நாளை (01.10.2026) முதல் நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளிலும் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
What’s your Reaction?

