தமிழர் தேசம் இன்னல்களை எதிர்கொண்ட போது தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீரர்களது பெற்றோர்கள் உரித்துடையார்கள் மற்றும் சம்பூர் ஆலங்குளத்தில் மாவீரர்கள் துயில் கொள்வதற்காகத் தமது காணிகளை உவந்தளித்தோரை போற்றிக் கௌரவிக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டம் தழுவிய ரீதியில் அனைத்துப் பெற்றோர்களும் கலந்து கொள்ளக் கூடிய வகையில் எதிர்வரும் 22.11.2026 அன்று திருகோணமலை உப்புவெளிக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் பெற்றோர்களைக் கலந்து கொள்ள அழைக்கும் வகையிலான அழைப்பிதழ்கள் எமது நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் பிரதேச உறுப்பினர்களினால் உங்கள் வீடுகளுக்கே வந்து வழங்கப்படுகிறது. நிகழ்வில் கலந்து கொள்ளும் பெற்றோர்களுக்கு இவ்வழைப்பிதழ் கட்டாயமான ஒன்றாக இருப்பதனால் நிகழ்வுக்கு வருகை தரக் கூடிய மதிப்புக்குரிய பெற்றோர்கள் அனைவரையும் இதனைப் பெற்றுக் கொள்ளுமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்நிகழ்வு சட்டத்துக்குட்பட்ட வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையினாலும் பெற்றோர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதற்கான பேருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமையினாலும் யாரேனும் தங்களை நிகழ்வில் கலந்து கொள்ளாமல் செய்வதற்காக விசாரணைகள் வரும், நிகழ்வுக்குத் தடை, போன்ற தேவையற்ற வதந்திகளைப் பரப்பினால் நம்பத் தேவையில்லை எனவும் அவ்வாறான ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ அல்லது இதுவரை அழைப்பிதழ்கள் யாருக்கும் கிடைக்கவில்லை என்றாலோ தங்களுக்கான தேவைகள் வழிகாட்டுதல்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவை 0702923576 என்கிற தொலைபேசி இலக்கமூடாகத் தொடர்பு கொள்ளுமாறும் மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி
நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு

What’s your Reaction?

