யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்த குற்றத்திற்கு 90 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியில் அதிக விலைக்கு தண்ணீர் போத்தல் விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினரால் யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விடுதி முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகி குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து, குறித்த குற்றத்திற்காக வ 90 ஆயிரம் ரூபா நீதிமன்றினால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

