யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கியூப் மணலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு ஒரு ரிப்பர் (3 கியூப்) மணல் ரூ.44,000 என்ற விலையில் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்துக்கான போக்குவரத்துக் கட்டணப் பொறிமுறையில், ஆரம்ப 3 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கான கட்டணம் கிலோமீற்றருக்கு ரூ.1,250 எனவும், தொடர்ந்து 10 கிலோமீற்றர் வரையிலான தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.300 எனவும், 10 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்துக்கு கிலோமீற்றருக்கு ரூ.225 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்துள்ள பயனாளிகளுக்கு மேலதிகமாக, மணல் தேவைப்படும் ஏனைய அரச வீட்டுத்திட்டப் பயனாளிகளின் விபரங்களையும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்குத் தேவையான மணலின் அளவு மற்றும் தேவைகள் தொடர்பான விபரங்களையும் மாவட்ட செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் யாழ்ப்பாண மாவட்ட செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஏற்கனவே மணல் தேவைக்கான பெயர் பட்டியலைச் சமர்ப்பித்திருந்தும் இதுவரை மணலைப் பெற்றுக்கொள்ளாத பயனாளிகள், கோண்டாவிலில் அமைந்துள்ள யாழ்ப்பாண மாவட்ட பாரவூர்தி சங்கத்தில் மணலின் மாதிரியைப் பார்வையிட்டு, அதனைத் தொடர்ந்து உரிய பணத்தைச் செலுத்துமாறும் மாவட்ட செயலர் அறிவித்துள்ளார் .
காணொளி இணைப்பு: https://www.facebook.com/reel/1476103757680154
What’s your Reaction?

