உள்ளூர் செய்திகள்

இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்த ஹர்ஷ டி சில்வா

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் குழுவிலிருந்து இலங்கை வெளியேறினாலும், மீண்டும் சர்வதேச நிதிச் சந்தையில் செயலூக்க உறுப்பினராக மாற இன்னும் வாய்ப்புகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இணங்கிய பொருளாதார சீர்திருத்தங்களைத் தொடர்வதும், கடன் மதிப்பீட்டை உயர்த்துவதும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இலங்கையின் தற்போதைய நிலைமையை விளக்கி இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

Fitch Ratings இலங்கையின் கடன் மதிப்பீட்டை உயர்த்திய சில நாட்களுக்குள், உலகின் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான MOODYS இலங்கையில் நீண்ட கால அந்நியச் செலாவணிக் கடன்களை வழங்குவது தொடர்பான மதிப்பீடுகளையும் உயர்த்தியது.

MOODY”S கடன் மதிப்பீட்டு நிறுவனம் இலங்கையின் நீண்ட கால அந்நியச் செலாவணி கடன் வழங்கல் மதிப்பீட்டை உயர்த்தியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்>ஐநாவுக்கும் சுற்றுலா அமைச்சுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

https://www.youtube.com/shorts/lAee-jJsYmA?feature=share

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்