சவுதியில் மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜனின் உயிரைக் காப்பாற்றுமாறு, அவரது தாயார் சவுதி அரபியே அரசே எனது மகனை மன்னியுங்க்ள் என சவுதி அரசாங்கத்திடமும், நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசாங்கத்திடமும், மனிதநேயமிக்க சர்வதேச அமைப்புகளிடமும் கண்ணீருடன் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“எனது மகன் என் கண்முன்னே வளர்ந்தவன். இன்று அவனுக்கு மரண தண்டனை என்ற செய்தியை கேட்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு தாயாக நான் உயிருடன் மரணத்தை அனுபவிக்கிறேன். என் மகனை என்னிடமிருந்து பறித்துவிடாதீர்கள். அவனுக்கு இன்னுமொரு வாய்ப்பை வழங்குங்கள்…” என அவர் கண்ணீருடன் மன்றாடியுள்ளார்.
“என் மகனுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டும். அவன் மீண்டும் தனது தாயின் குரலைக் கேட்க வேண்டும். அவனை உயிருடன் மீண்டும் காண வேண்டும் என்பதுதான் ஒரு தாயாக எனது ஒரே ஆசை. அவனுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள்…” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்கான மனிதநேய அடிப்படையிலான அனைத்து முயற்சிகளையும் உடனடியாக முன்னெடுக்குமாறு சவுதி அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மற்றும் சர்வதேச மனிதநேய அமைப்புகளிடம் அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What’s your Reaction?

