அட்டாளைச்சேனை சம்புநகர் அக்/ அல்-
மினா வித்தியாலயத்தில் மீலாதுன் நபி விழாவும், மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அரசாங்கத்தின் சித்தி புள்ளியான 70 மேல் பெற்று சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கான பாராட்டும் வைபவமும் பாடசாலை சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (09.09.2026)
பாடசாலையின் மண்டபத்தில் அதிபர்
எம்.ஐ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் PMY.அறபாத் முகைதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
மேலும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ASM.உவைஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் B.ஜிஹானா, அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர்MHM.றஸ்மி,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ பிரதித் தவிசாளர் MM.நிஹால் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் சமூக சேவகர் ஏ.சீ.நியாஸ்,அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான பாறூக் நஜி
SIM.றியாஸ், ஓய்வு நிலை அதிபர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ.அன்சார்,
அட்டாளைச்சேனை 04 பிரஜா சக்தி தவிசாளர் தோழர் AM.அர்பான் இஸ்லாம் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் மௌலவி ஏ.ஆர்.எம்.மனாப்,
அட்டாளைச்சேனை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் பாடசாலையின் EPSI மௌலவி NT.நஸீர், ஓய்வு நிலை ISA
என்.சம்சுத்தீன்,பமீல் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் முகாமைத்துவ பணிப்பாளர் AAM.பமில், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் ALM.அக்ரம் (அர்சாத்)
உதவிஅதிபர்MI.ஹாசீம்,வலயத்தலைவர்
MSM.நஸீர், ஆசிரியர்களான MACM. றஜாப், ACM.பாயிஸ், ALM.றஸ்மி உட்பட
SDEC உறுப்பினர்கள் OBA செயலாளர்
உறுப்பினர்கள் பிரமுகர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் Above 70 மேல் புள்ளிகள் பெற்ற சகல மாணவர்களும் பாராட்டப்
பட்டனர். மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டதுடன் இரண்டாம் தவணைப் பரீட்சையில் வகுப்பு ரீதியாக
முதல் நிலை மாணவர்கள், பாடசாலை க்கு தொடர்ச்சியாக வருகை தந்த மாணவர்களும் தரம் 5 கற்பித்த ஆசான்
ALM.றஸ்மி ஆசிரியரும் பாராட்டி பிரதம கௌரவ,விசேட அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் PMY.அறபாத்
முகைதீன் அவர்களின் அர்ப்பணிப்புகளு
டனான கல்விச் சேவையினைப் பாராட்டி
பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும் சமூகத்தவர்களால்
கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதன் போது மீலாதுன் நபி விழா
தொடர்பில் மாணவர்களின் பல நிகழ்வுகள் நடைபெற்றன.
நிருபர்
எஸ்.எம்.அறூஸ்,ஏ.எல்.றமீஸ், றியாஸ் இஸ்மாயில்


