உள்ளூர்

கிளிநொச்சியில் புதையல் தேடிய சிங்களவர்கள்

பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்தனர்

கிளிநொச்சி கனகபுரம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22, 25, 37, 46 மற்றும் 53 வயதுடைய கெலன்பிந்துவௌ, பலாங்கொடை மற்றும் வெயாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து அகழ்வு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை