தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை(27.08.2026) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளான தனியார் காணிகளை காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்க வேண்டும் எனக் காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை மாலை ஆரம்பித்த போராட்டம் இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை வரையில் இரண்டு நாட்கள் முன்னெடுக்கப்பட்டது.
காணொளி இணைப்பு : https://www.facebook.com/reel/1892847968352061

What’s your Reaction?

