உலகம் செய்திகள்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவிப்பு!

உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும்; புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் ஜனாதிபதி; விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்கிவிட்டோம் என்றும் இந்த தடுப்பூசி 2025 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்றும் தடுப்பூசிகளை நோயாளிகளுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் ரஷிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் பேசுகையில், புற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கி உள்ளோம் என்றும் இது மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷியாவின் இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தால் உலகம் முழுதும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அதிக பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படியுங்கள்>எனது பேச்சில் ஒரு பகுதியை மட்டும் வைத்து அனைவரும் குறை கூறுகின்றனர் – அமித் ஷா.

https://www.youtube.com/@pathivunews

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்