வீரமுனைப் படுகொலை என்பது 1990 ஆம் ஆண்டு ஆவணி 12 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டம் வீரமுனை கிராமத்தில் நடைபெற்ற ஒரு கொடூரமான படுகொலையாகும். இலங்கைப் படைத்தரப்பினரும் ஊர்காவற் படையினரும் இணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 ஆனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.
இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த முஸ்லிம் ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான தமிழ் பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை
What’s your Reaction?

