கிளிநொச்சி, இயக்கச்சி பகுதியில் இன்று பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் குடும்பப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வீதியில் நின்றுகொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் வந்த ‘ஹயஸ்’ (HiAce) ரக வாகனம் மோதியதிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பாரிய காயங்களுக்குள்ளான அப்பெண், உடனடியாக மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பூ.லின்ரன்
வடமராட்சி பச்சிளைப்பள்ளி நிருபர்

What’s your Reaction?

