காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு ஹட்டனிலிருந்து நீர் பாயும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால், அதன் இருமருங்கிலும் உள்ள பல வீடுகள் இன்று (03) வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டும் டிக்கோயா கால்வாய் பெருக்கெடுத்தமையினால் இவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டதாகச் சுட்டிக்காட்டும் பிரதேசமக்கள், மீண்டும் பெருக்கெடுத்ததன் காரணமாகத் தமது வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, மகாவலி கங்கை பெருக்கெடுத்தமையினால் நாவலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
What’s your Reaction?

