உள்ளூர்

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல அதிகரிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர்களில் யாழ். போதனா வைத்தியசாலையில் 11 பேரும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 28 பேரும் மொத்தமாக 39 பேர் விடுதிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

யாழ். போதனா வைத்தியசாலையில் மூன்று நாட்களுக்கு முன்னர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட 23 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை