உள்ளூர் செய்திகள்

புதிய சபாநாயகர் பதவிக்கு மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரை!

e0aeaae0af81e0aea4e0aebfe0aeaf e0ae9ae0aeaae0aebee0aea8e0aebee0aeafe0ae95e0aeb0e0af8d e0aeaae0aea4e0aeb5e0aebfe0ae95e0af8de0ae95e0af81 | Pathivu News

சபாநாயகர் பதவிக்கு மூன்று பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணஆராச்சி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சபாநாயகர் அசோக ரன்வல பெற்றதாக கூறப்படும் கலாநிதி பட்டம் தொடர்பாக கடந்த சில நாட்களாக நாட்டில் பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், கடந்த 13 ஆம் திகதி பிற்பகல் அசோக ரன்வல, சபாநாயகர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.

இதன்படி, அவரது இராஜினாமா கடிதம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி அதனை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த இராஜினாமா குறித்து ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாராளுமன்ற செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீரவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் 17ஆம் திகதி பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளதுடன், அரசியலமைப்பின் பிரகாரம் அன்றைய தினம் புதிய சபாநாயகர் நியமிக்கப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்>சபாநாயகரின் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

 

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

imf e0ae89e0aeafe0aeb0e0af8de0aeaee0ae9fe0af8de0ae9fe0ae95e0af8d e0ae95e0af81e0aeb4e0af81 e0ae9ce0aea9e0aebee0aea4e0aebfe0aeaae0aea4 | Pathivu News
செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
பாடலைத் தேர்ந்தெடுக்கவும்
00:00
00:00
🔊
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp