சமூக சேவைகள் திணைக்களத்தினால் நேரடியாக பராமரிக்கப்படும் திறன் விருத்தி பகல் நேர பராமரிப்பு நிலையத்தின் திறப்பு விழா எதிர்வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம் ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) ஜெ.ஸ்ரீபதி, மாவட்ட செயலகத்தின் கிளைத் தலைவர்கள் மற்றும் சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து முன்னேற்பாடுகள் தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் விரிவாக ஆராய்ந்து, ஒவ்வொரு பணியும் உரிய காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், திறப்பு விழாவின்போது முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு, அவற்றுக்கான பொறுப்புகள் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலக கிளைத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்வின் முழுமையான ஒருங்கிணைப்பு மற்றும் ஒழுங்கமைப்பு பொறுப்பு கிண்ணியா பிரதேச செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வு நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ள முதலாவது வேலைத்திட்டமாக அமைவதால், எந்தவித குறைபாடுகளும் இன்றி மிகச் சிறப்பாகவும் முன்மாதிரியாகவும் நடத்துவதற்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.

What’s your Reaction?

